கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கே.எஸ்.புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திறன் வகுப்பு குழந்தைகளுக்கு எவ்வாறு கற்றலை மேம்பாடுடைய செய்து உயர் வகுப்புக்கு அனுப்புதல் சார்ந்து வழிகாட்டுதல் தரப்பட்டது அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது.ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியில் தொடர் விடுப்பில் இருக்கக்கூடிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோரை அணுகி அவர்கள் வீடுகளுக்கு சென்று மீண்டும் பள்ளியின் அவசியத்தையும் கல்வியின் மேம்பாட்டையும் எடுத்து கூறி பள்ளிக்கு அழைத்து வருதல் வேண்டும். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் உள்ளவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான உரிய வழிகாட்டுதல் தந்து அவர்களை மேல்வகுப்பில் சேர்த்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு பள்ளி வளாகத்திற்கும் புகையில்லா வளாகம் என்ற உறுதி பாட்டு உடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உதவியோடு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி மாணவருடைய பைகளை சோதிக்க வேண்டும் எந்த ஒரு வடிவிலும் பள்ளி வளாகத்திற்குள் போதை பொருட்கள் உள் நுழைவதை அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் எந்த ஒரு கடையிலும் போதை பொருள் விற்பனையை ஊக்குவிக்க கூடாது அப்படி தகவல் தெரிந்தால் தமிழ்நாடு Tamil Nadu Drug free appசெயலியை அதை அனைவரும் பதிவிறக்கம் செய்து அதில் போதைப்பொருள் சார்ந்த விழிப்புணர்வை பதிவேற்றம் செய்ய வேண்டும்.அவ்வாறு போதைப்பொருள் மாணவரிடத்தில் இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் உள்ள அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்மழைக்காலங்களில் பள்ளி வளாக தூய்மையை மேம்படுத்த வேண்டும் கழிப்பிடத் தூய்மை அவசியம்.மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட சிறப்பு வகுப்புகள் அவசியம் நடத்தி 100% இலக்கோடு பயணிக்க வேண்டும்.என்று நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை திரு கே எஸ் புருஷோத்தமன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளித் துணை ஆய்வாளர் கை பெரியசாமி செய்திருந்தார்.வட்டார வளமைய ஆசிரியர் திரு. சரவணன் திருமதி. ராமேஸ்வரி, செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வின் உதவி செய்து இருந்தனர்.முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்து அவர்களை கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார்.இக்கூட்டத்தில்பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 45 பேர் கலந்து கொண்டார்கள்
Next Story