கொல்லிமலையில் கொண்டை ஊசி வளைவு சாலையில் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்.
NAMAKKAL KING 24X7 B |12 Nov 2025 4:06 PM ISTகொல்லிமலையில் கொண்டை ஊசி வளைவு சாலையில் சரக்கு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு புதுவலவு பகுதி சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவர் சேந்தமங்கலம் அடுத்த நைனாமலை பகுதியில் உள்ள கிரசர் ஒன்றில் சரக்கு ஆட்டோவில் ஜல்லி கற்கள் மற்றும் எம். ஸ்டாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கொல்லிமலை அரியூர் நாடு புதுவலவு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். கொல்லிமலை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது சரக்கு ஆட்டோவின் ஆக்சல் கட்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்னாவது கொண்டு ஊசி வளைவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் பரமேசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



