டூவீலரில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது

X
Komarapalayam King 24x7 |12 Nov 2025 7:15 PM ISTகுமாரபாளையத்தில் டூவீலரில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் சாலை கௌரி மெஸ் அருகே ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் அதிக விலைக்கு ஒருவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் வட்டமலை பகுதியை சேர்ந்த பெருமாள், 52, என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்ததுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
