சாலையோர கடையில் இரும்பு ஆங்கிளில் தூக்கு மாட்டி ஆண் தற்கொலை

X
Komarapalayam King 24x7 |12 Nov 2025 7:35 PM ISTகுமாரபாளையத்தில் சாலையோர கடையில் இரும்பு ஆங்கிளில் தூக்கு மாட்டி ஆண் தற்கொலை
குமாரபாளையம் சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு தனியார் வங்கி அருகே உள்ள ஒரு கடையின் இரும்பு ஆங்கிளில் ஒரு ஆண் தன் கலர் வேட்டியால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டு இருப்பதாக நேற்று அதிகாலை 04:45 மணியளவில் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் விசாரணை செய்ததில், இறந்தவர் பெயர் ரமேஷ் (எ) சந்திரசேகர், 55, என்பதும், இவரது மனைவி, மகள் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுக்கு முன்பு பிரித்து சென்று விட்டதாகவும், வெளியில் தங்கி வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து இவரது தாய் மேனகா, 75, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Next Story
