எஸ்ஐஆர் திருத்த படிவங்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுகமுகவர்களும் அதிகாரி களோடு சென்று பார்க்க வேண்டும். முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தல்

X
Tiruchengode King 24x7 |13 Nov 2025 6:20 PM ISTவெளியூர் சென்றவர்கள் இறந்தவர்களின் வாக்குகளை நீக்காமல் திமுகவினர் ஏமாற்றி அவர்களது வாக்கை செலுத்த பார்ப்பார்கள் ஒரு தொகுதிக்கு 15 ஆயிரம் வாக்குகள் போலி வாக்குகள் இருக்கும் அதை நம் முகவர்கள் கவனமாக பார்க்க வேண்டும்.திருச்செங்கோடு பாக முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி நகர பூத் முகவர்கள் பி எல் ஏ 2 ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அங்கமுத்து ஏற்பாட்டில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டு திருச்செங்கோடு நகரப் பகுதிகளை சேர்ந்த எண்பத்தி ஏழு பூத் முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது எஸ். ஐ ஆர் திருத்த படிவங்களை அதிகாரிகள் தீவிரமாக வழங்கி வருகின்றனர். அவர்களோடு நமது அதிமுக முகவர்களும் உடன் சென்று ஒவ்வொரு வாக்குகளும் விடுபடாமல் சேர்ப்பதற்கு உறுதுணையாக செயல்பட வேண்டும். திமுகவினர் வெளியூர் சென்றவர்கள் இறந்தவர்களின் வாக்குகளை நீக்காமல் அவர்கள் இங்கேதான் உள்ளனர் வெளியூர் செல்லவில்லை என ஏமாற்றி அவர்களது வாக்குகளை தேர்தலின் போது அளிக்க முயற்சி செய்வார்கள். அதனை கவனமாக பார்த்து அங்கு உள்ள மக்களை மட்டும் சேர்ப்பதற்கும் இல்லாதவர்களை அதிகாரிகளிடம் சொல்லி நீக்குவதற்கும் முகவர்கள் செயல்பட வேண்டும். ஒரு வார்டுக்கு 200 வாக்குகள் போலி வாக்குகள் கட்டாயம் இருக்கும். அப்படி எடுத்துக் கொண்டோம் என்றால் தொகுதிக்கு 15 ஆயிரம் வாக்குகள் போலி வாக்காளர்கள் இருப்பார்கள். இறந்தவர்கள் வெளியூர் சென்றவர்கள் அது போன்ற வாக்குகளை முறையாக பார்த்து நீக்க அதிகாரிகளோடு கவனமாக நீங்களும் செயல்பட வேண்டும். இல்லை என்றால் அந்த வாக்குகளை திமுகவினர் ஏமாற்றி அந்த வாக்குகளை அவர்களுக்கு செலுத்த முயற்சி செய்வார்கள். நமது முகவர்கள் அதனை தடுப்பதற்கு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் முதல்வராக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் அரியணையில் அமர்த்த நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் பொருளாளர் பரணிதரன், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன் மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
