ராசிபுரம் ஒரு வழிச்சாலை பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் பயணிகள் அவதி...

X
Rasipuram King 24x7 |13 Nov 2025 7:41 PM ISTராசிபுரம் ஒரு வழிச்சாலை பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் பயணிகள் அவதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் வழியாக புதுப்பாளையம் சாலை பகுதியில் இருந்து பட்டணம் செல்லும் ஒருவழிச்சாலை பகுதியில் தனியார் திருமண மண்டபம் அடுத்து உள்ள ஒரு சில இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கரம், மற்றும் பேருந்து ஆகியவை செல்ல மிகவும் கடினமாக உள்ளதாகவும், மேலும் பயணிகள் அவ்வழியே செல்லும்போது தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
