பூமலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

X
Kangeyam King 24x7 |13 Nov 2025 8:18 PM ISTமங்கலம் அருகே பூமலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபடுபட முயன்றதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுக்கா மங்கலம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி கார்டன், K.K.கார்டன், KKGகார்டன், SSK. கார்டன், SSM கார்டன் உள்ளிட்ட பகுதியில் உள்ளன. அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும், வீடுகளில் ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், அன்றாட பயன்பாட்டிற்கு தண்ணீரை மாதம் 8000 ரூபாய் செலவு செய்து தண்ணீர் விலைக்கு வாங்குவதாகவும், மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் தெருவில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், சில நேரங்களில் சட்டவிரோத செயல்களும், வழிப்பறி சம்பவங்களும் அப்பகுதியில் அரங்கேறி வருவதாகவும், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பூமலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பகுதி பொதுமக்கள் இன்று மங்கலம், பல்லடம் சாலை பூமலூர் பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், பூமலூர் ஊராட்சி செயலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் 15 நாட்களில் சரி செய்து பெறுவதாக கூறியதால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
