திருச்செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் குழி தோண்டி காப்பர் கம்பிகள் திருட்டு எட்டு பேர் கைது திருச்செங்கோடு நகரபோலீசார் அதிரடி நடவடிக்கை

திருச்செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் குழி தோண்டி காப்பர் கம்பிகள் திருட்டு எட்டு பேர் கைது திருச்செங்கோடு நகரபோலீசார் அதிரடி நடவடிக்கை
X
திருச்செங்கோடு நகரம்ஈரோடு ரோடுபகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமானகாப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல்
திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோட்டில் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த ஒன்பதாம் தேதி இரவு சிலர் சாலையில் குழி தோண்டி கொண்டிருந்த, போது ஏன் என விசாரித்தவர்களிடம் ஏர்டெல் நிறுவனத்திற்கு கேபிள் ஒயர் பதிக்க குழி தோண்டுவதாக கூறியுள்ளனர் நள்ளிரவு நேரத்தில் குழி தோண்டுவதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பதினோராம் தேதி மீண்டும் குழி தோண்டுவதைப் பார்த்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி இடம் புகார் தெரிவித்துள்ளனர் சந்தேகத்துக்கிடமான வகையில் நள்ளிரவில் வந்து கேபிள் பதிப்பதாக கூறி குழி தோண்டிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர் இதனை எடுத்து மீண்டும் குழி தோண்டினால் தகவல் தெரிவிக்குமாறு காவல் நிலை ஆய்வாளர் வளர்மதி தெரிவித்ததை எடுத்து பன்னிரெண்டாம் தேதி மீண்டும் பொலிரோ வாகனத்தில் வந்த சிலர் குழி தோண்டி கொண்டிருப்பதை பார்த்துபிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வரும் இளச்சிபாளையம் அகரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதிக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி போலீசார் உடன் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் அவர்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு குழி தோண்டும் வேலை செய்து வருவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் வயர்களை திருடி விட்டு வருவதும் இவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அத்தனூர் பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வருவதும் வேலைக்கு வர பயன்படுத்திய பொலிரோ வாகனம் அவர்களை ஏற்றி இறக்கி விட பயன்பட்டு வந்தது என்பது தெரிய வந்தது மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில் 400  பேர் (pair) என அழைக்கப்படும் 60 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் 800 பேர் என அழைக்கப்படும்60 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் 100 பேர்என அழைக்கப்படும் 7500 மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் என ரூபாய் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடி அத்தனூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் கிலோ 190 க்குவிட்டு இருப்பது தெரியவந்தது கிலோ ஆயிரம் ரூபாய் மதிப்புஉள்ள காப்பர் வயரை 190 க்கு விற்று பணத்தை எட்டு பேரும் சரிசமமாக பங்கிட்டு கொண்டுள்ளனர் விசாரணையில் விபரங்கள் தெரிந்த திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி போலீசார் உடன் சென்று பழைய இரும்பு கடையில் இருந்த காப்பர் வயர்களை மீட்டு வந்தார் மேலும் திருடப் பயன்படுத்திய மேலும் திருட பயன்படுத்திய பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் மணிகண்டன் 29,அதேபோல் சேர்ந்த ராம் என்பவர் மகன் அருண் 21 ரவி என்பவரது மகன் ரஞ்சித் 23, தர்மபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டிராமியனஹள்ளி பகுதியைச் சேர்ந்தசேட்டு என்பவரது மகன் தெய்வம் 32 அதே ஊரைச் சேர்ந்த காத்தவராயன் மகன் மதுரை வீரன் கிருஷ்ணன் மகன் சின்னதுரை27, துரைசாமி மகன் மணிகண்டன் 19, கணேசன் மகன் சுரேஷ்,ஆகிய எட்டு பேரை கைது செய்துதிருட்டு வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை எடுத்து எட்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
Next Story