இ.பி.நகரில் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியை ஆரணி அதிமுக எம்.எல்.ஏ.ஆய்வு

இ.பி.நகரில் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியை ஆரணி அதிமுக எம்.எல்.ஏ.ஆய்வு
X
ஆரணி அடுத்த இ.பி.நகர் பகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வழங்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
ஆரணி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் (எஸ்ஐஆர்) வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாயிலாக ஆரணி அடுத்த இராட்டிணமங்கலம் இ.பி.நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு வீடுகளில் வழங்கும் பணியை ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், Special Intensive Revision (SIR) என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலை பிழைகள் இல்லாமல் திருத்தபடுத்துவதும், தகுதியுடைய வாக்காளர் எவரும் விடுபடக் கூடாது, இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் என்பதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இறந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூர் சென்ற வாக்காளர்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயர் இது போன்ற வாக்காளர்களை கண்டறிவதே முக்கிய பணியாகும். அதனடிப்படையில் ஆரணி அடுத்த இராட்டிணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த இ.பி.நகர் பகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடுகளில் வழங்கும் பணியை முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன்ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது ஒன்றியசெயலாளர் இ.ஜெயப்பிரகாஷ், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றியதுணைசெயலாளர் இ.பி.நகர் குமார், நகர மன்ற உறுப்பினர் ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோர் இருந்தனர். .
Next Story