உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த பாஜகவினர் விழிப்புண்வு துண்டு பிரசுரம் விநியோகம்

X
Arani King 24x7 |14 Nov 2025 3:27 AM ISTஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தி கடைகளிலும், வீடுகளிலும் பாஜக சார்பில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்
ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தவும், உள்ளூர் விவசாயிகள், கைவினை கலைஞர்களை ஆதரியுங்கள் என்று வலியுறுத்தி கடைகளிலும், வீடுகளிலும் பாஜக சார்பில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். மேலும் சுதேசி உறுதிமொழி படிவத்தில் என் அன்றாட வாழ்வில் இந்திய தயாரிப்பு பொருட்களையே பயன்படுத்துவேன் என்றும், வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்களில் இந்திய பொருட்களுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்றும், உள்ளூர் கிராமங்கள், விவசாயிகள், உள்ளூர் கைவினை கலைஞர்கள் ஆகியோர்களை ஆதரித்து உள்ளூர் தொழில்களை முன்னேற்றுவேன் என்று சுதேசி உறுதிமொழி படிவத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் கையெழுத்து பெற்றனர். பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசிந் நலத்திட்ட பிரிவின் மாநிலசெயலாளர் மற்றும் சட்டமன்ற இணை அமைப்பாளர் சைதை வ.சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டதுணைத்தலைவர்கள் நித்யானந்தம், அலமேலு, பேச்சாளர் தங்கராஜி, மாவட்ட நிர்வாகி பஞ்சாட்சரம், கிளைதலைவர் நாராயணன், கிளை நிர்வாகிகள் சுரேஷ்பாபு, திருவேங்கடம், குட்டி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Next Story
