கிருஷ்ணராயபுரம் அருகே பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள்,விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதில் சிக்கல்

கிருஷ்ணராயபுரம் அருகே பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள்,விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதில் சிக்கல்
X
தூர்வார அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் தென்கரை பாசன வாய்க்காலில் இருந்து பிள்ளபாளையம் பிடாரியம்மன் கோவில் வரை கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த கிளை வாய்க்கால் மூலம் அப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட வாழை, வெற்றிலை, நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பாசன வாய்க்காலில் தற்போது ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளதால் தற்போது விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாசன வாய்க்காலில் இருந்த ஆகாயத்தாமரை செடிகள் தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பாசன வாய்க்காலை முழுவதுமாக ஆகாயத்தாமரைச் செடிகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story