பீகாரில் பாஜக மாபெரும் வெற்றி

பாஜக குளித்தலை ஒன்றிய மற்றும் நகரம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பாஜக குளித்தலை ஒன்றிய மற்றும் நகரம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் நமச்சிவாயம், குளித்தலை ஒன்றிய செயலாளர் ஹரிராம் குமார், நகர பொறுப்பாளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
Next Story