வெண்ணமலை ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி கோவில் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழும் சுமார் 3000 திற்க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் மணி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






