உழவரைத்தேடி வேளாண்மை திட்டத்தின்கீழ் விவசாயிகளுடன் கூட்டம்
Arani King 24x7 |14 Nov 2025 9:43 PM ISTஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை -உழவர் நலத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் பேசினார் வேளாண் உதவி இயக்குநர் ஆர்.புஷ்பா.
ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை -உழவர் நலத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்டத்தின்கீழ் நடைபெற்ற விவசாயிகளுடன் ஆலோனை கூட்டம் நடைபெற்றதில் பூசிமலைக்குப்பம் முன்னாள் ஊராட்சித்தலைவரும், திமுக ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான கருணாகரன் தலைமை தாங்கினார். மேலும் வேளாண் உதவி இயக்குநர் ஆர்.புஷ்பா அனைவரையும் வரவேற்று விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலதிட்டங்கள் குறித்தும், பயிர் காப்பீடு குறித்தும், தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினார். மேலும் இதில் உதவிவேளாண்மை அலுவலர்கள் சுபிக்ஷா, சிவக்குமார், அட்மா அலுவலர் சரவணன், டிவிஎஸ் அறக்கட்டளை சார்பில் சுதா, பயிர் காப்பீடு களப்பணியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளையும், சந்தேகங்களை கேட்டறிந்தனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், பவர்டில்லர்கள் ஆகியவற்றை மானிய விலையில் பெற ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறித்தினர்.
Next Story



