அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வுமுகாம்

அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வுமுகாம்
X
குமாரபாளையத்தில் சட்ட விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது
குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குமாரபாளையம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகிக்க, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்தரூபி முன்னிலை வகித்தார் சட்டத் தன்னார்வலர் வேல்முருகன் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் , மாவட்ட நீதிபதி வேலுமயில், குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், குமாரபாளையம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நவீனா, பேனல் லாயர் சரண்யா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போக்ஸோ சட்டம், புகையிலை, மது, சாலை விதிகள், அலைபேசியால் ஏற்படும் தீமைகளையும், குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்தும் அதற்கான தண்டனை கள் குறித்தும். சிறுவர் சீர்திருத்த சாலை குறித்தும், இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்வது எவ்வாறு என்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறி, சட்ட விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினார்கள். இதில் மேல்நிலை மாணவிகள் 300 பேரும் மாணவர்கள் 100 பேரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் சட்டத் தன்னார்வலர் விடியல் பிரகாஷ் நன்றி கூறினார்.
Next Story