திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தப் பணிவாக்குச்சாவடி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி விசாரணை
Tiruchengode King 24x7 |15 Nov 2025 8:24 PM ISTதிருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தப் பணிதிருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் விசாரணை விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தல்
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 87 வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழங்கப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய வலைதள செயலியில் பதிவு செய்யபடும் பணி நடந்து வருகிறது. திருச்செங்கோடு நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி ஆய்வு செய்தார். ஆய்வின் போது இல்லாத சூப்பர் வைசர்களை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என எச்சரித்தார். எந்தப் பணி இருந்தாலும் இந்தப் பணியில் அனைவரும் முழுகவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதே போல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த Blo க்களின் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த Blo சத்துணவு அமைப்பாளர் ஈஸ்வரிவருக்கு திடீர் என உடல் நலக் குறைவு ஏற்பட்டது உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி உத்தரவிட்டார். தொடர்ந்து திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். BLO க்களுக்கு 2GB நெட் மட்டுமே வழங்கப் படுவதாகவும் அது போதவில்லை என BLOக்கள் பேசிக் கொண்டதோடு கனெக்சன் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் பேசிக் கொண்டனர்.ஆய்வின்போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தாசில்தார் கிருஷ்ணவேணி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்
Next Story


