குமாரமங்கலம் பகுதியில் விநாயகர் கோவிலுக்குள் கேட்பாரற்றுக் கிடந்த எஸ்ஐஆர் படிவங்கள் பரபரப்பு

திருச்செங் கோட்டை அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியில் வாக்குச் சாவடி எண் 77 க்கு சொந்தமானசிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியின் படி வாக்காளருக்கு வழங்க வேண்டிய விண்ணப்பங்கள்குமாரமங்கலம் நாடார் தெரு செல்வ விநாயகர் கோவில் வளாகத்திற்குள் கேட்பாரற்றுக் சிதறி கிடந்த நிலையில் பரபரப்பு.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்க வீடு வீடாகச் சென்று படிவங்கள் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திருப்பி வாங்கிகணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் நாடார் தெரு செல்வ விநாயகர் கோவிலுக்குள் பகுதியில் பாகம் எண் 77 க்கு உரிய வாக்காளர்களிடம் சென்று சேர வேண்டிய படிவங்கள் சிதறி கிடப்பதாகவும் உரிய அலுவலர்கள் யார் இன்றிகேட்பாரற்ற நிலையில் கிடப்பதாகவும் கூறப்பட்டது நேரில் சென்று பார்த்த போது ஒரு பெஞ்சின் மேல் வாக்காளர்களுக்கு சென்று சேர வேண்டிய படிவங்கள் பி எல் ஓகுறிப்பேடு புத்தகம் ஒன்று ஒரு மஞ்சள் பை என குவியலாக கிடந்தது இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும்87 கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர்கள் கூறியதாவது மாலை சுமார் 5 மணி முதல் அருகில் யாரும் இல்லாத நிலையில் குவியலாக வாக்காளர்களுக்கு சேர வேண்டிய திருத்தப்பட்டியல் விண்ணப்பங்கள்சுமார் 300 படிவங்கள் கோவிலுக்குள் கேட்பாரெட்டு கிடந்தது 7 மணி வரை யாரும் வரவில்லை.பெரும் மழையோ காற்றோ அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதமோ ஏற்பட்டு படிவங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று இருந்தால் இந்த வாக்காளர்களின் கதி என்ன என்பது தெரியாத நிலை ஏற்பட்டிருக்கும் பொறுப்பற்ற நிலையில் படிவங்களை விட்டுச் சென்ற பி எல் ஓ மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் எனக்கு கூறினர்.அப்போது திடீரென குமாரமங்கலம் அங்கன்வாடி பணியாளர் வனிதா அங்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றதாகவும் பையை பாதுகாப்பாகத் தான் வைத்திருந்தேன் எனவும் யாரோ எடுத்து கீழே கொட்டியுள்ளார்கள் எனவும் கூறியபடி கீழே கிடந்த படிவங்களை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு சென்று விட்டார் இது குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் கண்ணன் 87 கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர்சுபா தேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தகூட்டத்திற்கு அவசரமாக செல்ல வேண்டிய இருந்ததால் பாதுகாப்புக்கு ஒரு பெண்ணை வைத்துவிட்டு சென்றதாகவும் யாரோ சிலர் பையில் இருந்த படிவங்களை பெஞ்சின் மேல் கொட்டி இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். பணத்தைவிட, விலை மதிப்பற்றதாக கருதப்படும் வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தான் தாங்கள் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய படிவங்களை பொறுப்பெற்ற தன்மையில் விட்டுச் சென்ற பி எல் ஓ வனிதா மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
Next Story