ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் முகாம்:

X
Rasipuram King 24x7 |15 Nov 2025 9:14 PM ISTராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் முகாம்: ஒரு சாதாரண மாணவனை கூட சாதனை மாணவனாக மாற்றக்கூடிய சக்தி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர், முனைவர் உதயகுமார் பேச்சு..
ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் முகாம்: ஒரு சாதாரண மாணவனை கூட சாதனை மாணவனாக மாற்றக்கூடிய சக்தி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர், முனைவர் உதயகுமார் பேச்சு.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1.ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 15.11.2025 சனிக்கிழமை அன்று பெற்றோர் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மெட்ரிக பள்ளியின் முதல்வர் Dr.P. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr.C.நடராஜீ அவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று தலைமை உரையாற்றினார். S. ஹரிபிரசாந்த் அவாகள் பெற்றோர் ஆசிரியர் சங்க உரையாற்றினார். பள்ளியின் பொருளாளர் V. இராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக முனைவர்.மு.ஆ. உதயக்குமார் மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல் அண்ணாமலை பல்கலை கழக மேனாள் செனட், அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் அவர்கள் சிறப்புரையாற்றினார் . சிறப்பு விருந்தினரை பள்ளியின் தலைவர் Dr.C.நடராஜீ அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர்.மு.ஆ. உதயக்குமார், அவர்கள் பேசும் போது.. இன்றைய தலைமுறை சேர்ந்த இளைஞர்கள் மாணவ மாணவிகள் கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஆசிரியர்கள் வகுப்பில் நடத்துகின்ற பாடத்தை நன்றாக கற்று சிறு வயதிலேயே தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடத்தை வீட்டில் குழந்தைகளுக்கு தினம்தோறும் நேரம் கடைப்பிடித்து டைம் டேபிள் போட்டு குழந்தைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து அனைத்தும் கற்றுத் தர வேண்டும், இன்றைய காலகட்டத்தில் நல்ல பழக்கவழக்கங்கள், நல்லறிவு, ஒழுக்கம் இவற்றை ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது போல் அதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும், ஒரு சாதாரண மாணவனை கூட சாதனை மாணவனாக மாற்றக்கூடிய சக்தி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் ஆசிரியர்கள் ஒரு கதாநாயகனாகவே அவர்களுக்கு தெரிகிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் தன் பிள்ளையை ஒரு சாதனை மாணவனாக மாற்ற கல்வி, விளையாட்டு போன்ற அனைத்திலும் முக்கியத்துவம் அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்கும் பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இன்றைய உலகத்தில் நடக்கின்ற அனைத்து நல்ல, தீய விஷயங்களும் உடனடியாக தெரிகின்ற வகையில் செய்திகள் ஆகியவை படித்து அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், மேலும் இன்றைய குழந்தைகள் செல்போனில் வருகின்ற பல நல்ல விஷயங்களை பார்க்கிறார்களா இல்லையோ, தீயவற்றை பார்க்கக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே செல்போனை அதிகமாக குழந்தைகளிடத்தில் கொடுக்கக் கூடாது, மேலும் இதில் அவர்களின் நேரத்தை அதிக அளவில் செலவழிக்க அவர்கள் ஈடுபாடு மாறி வருகிறது. எனவே பெற்றோர்கள் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும், என பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளித்து பேசினார். இந்த நிகழ்வில் தலைமையாசிரியை திருமதி. டி. தமிழ்ச்செல்வி அவர்கள் கல்வி செயல்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினார். பள்ளியின் செயலர் V. சுந்தரராஜன் அவர்கள் நிறைவுரையாற்றினார். இம்முகாமில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr.C. நடராஜி. பள்ளியின் செயலர் V. சுந்தரராஜன், பொருளாளர் V. இராமதாஸ், சி.பி.எஸ்.சி. சேர்மன் Er. N. மாணிக்கம், துணைத்தலைவர் Dr.M. இராமகிருஷணன், நிறுவனத் தலைவர் Dr.R.M. கிருஷணன், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியில் கல்லூரி சேர்மன். Dr.K.குமாரசுவாமி. RVET செயலர் S. சந்திரசேகரன், இணை செயலர் V.பாலகிருஷ்ணன், இயக்குநர் R. பெத்தண்ணன், CBSE பள்ளி முதல்வர் திருமதி. C.புனிதா, மெட்ரிக் பள்ளி முதல்வர் Dr. P.கிருஷ்ணமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிறைவாக பிரைமரி ஆசிரியை திருமதி. பி. அகிலா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
Next Story
