இராசிபுரம், பாரதிதாசன் பள்ளியில் போதை பொருள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க உறுதிமொழி...

இராசிபுரம், பாரதிதாசன் பள்ளியில் போதை பொருள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க  உறுதிமொழி...
X
இராசிபுரம், பாரதிதாசன் பள்ளியில் போதை பொருள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க உறுதிமொழி...
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி ஐஏஎஸ் அவர்கள் ஆணையின்படி நாமக்கல் மாவட்டம் போதை பொருள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் போதைப் பொருள் விழிப்புணர்வு குழு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் எந்த ஒரு வகையிலும் எந்த வடிவிலும் போதைப் பொருள்கள் கிடைத்தல் தடை செய்யப்படுகிறது. அந்தப் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் Tamilnadu Drug Free APP செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இதன் வழியே தங்கள் பள்ளிகளில் போதைப்பொருள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் பள்ளி வளாகத்திற்கு அருகிலோ அல்லது பள்ளி வளாகத்தை சுற்றிலும் எங்கேயும் போதை பொருள் எந்த வழியிலேயும் மாணவ மாணவியருக்கு கிடைத்ததை தடை செய்யும் நோக்கத்தில் இந்த செயலி ஒவ்வொரு ஆசிரியரும் பதிவிறக்கம் செய்து அதில் குறைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது ரகசியம்காக்கப்படும் செயலிழியாகும். அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அது சார்ந்து முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இராசிபுரம், பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி கு. பாரதி அவர்கள் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி அவர்களின் தலைமையில் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் அனைவரும்போதைப் பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story