ஐக்கிய விவசாயிகள் முன்னணி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் பி.தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிபிஐ ஏஐகேஎஸ் மாவட்ட செயலாளர் என்.செல்வராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,விதொச மாவட்ட செயலாளர் சி.ஜெயராமன், ஏஐடியூசி மாவட்ட குழு ஆர்.கோபிராஜ் சிபிஎம் ஏஐகேஎஸ் மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன்மாவட்டச் செயலாளர் பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் இ.கோவிந்தராஜ், உதவி செயலாளர் மு.து.செல்வராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.செங்கோடன், சிஐடியு தையல் தொழிலாளர் சங்கம் ஐ.ராயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் 5-ஆம் ஆண்டு கோரிக்கை போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறுவதையொட்டி திருச்செங்கோட்டில் நவம்பர் 26 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துதீர்மானம் நிறைவேற்றப் பட்டது.கூட்டத்தின் முடிவில் சிபிஐ ஏஐகேஎஸ் மாவட்ட செயலாளர் என்.செல்வராஜ் நன்றி கூறினார்.
Next Story