இரவில் கலெக்டர் தலைமையில் நடத்த எஸ்.ஐ.ஆர். ஆலோசனை கூட்டம்

X
Komarapalayam King 24x7 |16 Nov 2025 6:53 PM ISTகுமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் இரவில் நடந்தது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். ஆலோசனை கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நேற்று இரவு 10:00 மணியளவில் நடந்தது. இதில் எஸ்.ஐ.ஆர். படிவம் கொடுத்தவர்களிடம், விரைவில் பூர்த்தி செய்த படிவமாக பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்திட வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த பணியை விரைந்து செய்திட வேண்டும் என தாசில்தார், வி.ஏ. ஓ., தேர்தல் ஓட்டுச்சாவடி கண்காணிப்பளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் குமாரபாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார், திட்ட இயக்குனர் வடிவேல், நகராட்சி ஆணையர் ரமேஷ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், தேவராஜ், உள்பட பலர் பங்கேற்றனர். நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். படிவங்கள் சம்பந்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் வசம் அறிவுறுத்த இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
