முன்விரோதம் காரணமாக விதி மீறி மண், கற்கள் கொட்டி வைத்த நபர் தலைமறைவு

முன்விரோதம் காரணமாக விதி மீறி மண், கற்கள் கொட்டி வைத்த நபர் தலைமறைவு
X
குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக விதி மீறி மண், கற்கள் கொட்டி வைத்த நபர் தலைமறைவானார்.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ரவி, 63. கோழிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 60, என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாக தெரிகிறது. நவ. 11 காலை 07:35 மணியளவில், ரவிக்கு சொந்தமான இடத்தில் பழனியப்பன், மண், கற்களை கொண்டு வந்து கொட்டி விட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ரவி குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த பழனியப்பன் தலைமறைவானார்.
Next Story