இந்து சமய அறநிலை துறை சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா

X
Komarapalayam King 24x7 |16 Nov 2025 7:04 PM ISTகுமாரபாளையத்தில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா இந்து சமய அறநிலை துறை சார்பில் நடந்தது.
தமிழக அரசு சார்பில், அரசு இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களின் சார்பாக 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா பாண்டுரங்கர் கோவில் வளாகத்தில் உள்ள சுந்தரம் மண்டபத்தில் அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் நடந்தது. மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் சௌந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று, மூத்த தம்பதியர்களுக்கு திருமண பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன், திருச்செங்கோடு உதவி ஆணையர் ரமணிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
