மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கல்

X
Komarapalayam King 24x7 |16 Nov 2025 7:07 PM ISTகுமாரபாளையம் அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள சுமார் ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் வழங்கும் விழா நடந்தது. இதற்கான காசோலையை அக்குழு தலைவிகளிடம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நாச்சிமுத்து வழங்கினார். மேலும் அவர்களிடம் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள இத்தொகையினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கூறினார். இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
Next Story
