ராசிபுரத்தில் உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு நலநிதி உதவி எம்பி ராஜேஷ்குமார் வழங்கல்...

X
Rasipuram King 24x7 |16 Nov 2025 8:16 PM ISTராசிபுரத்தில் உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு நலநிதி உதவி எம்பி ராஜேஷ்குமார் வழங்கல்...
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறு கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் உயிரிழந்த 29. கட்சியினரின் குடும்பத்தினருக்கு தலா 10,000, என 29.000 ஆயிரம் நல உதவிகள் வழங்கினார். தொடர்ந்து முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், துணைத் தலைவர் ஆனந்த், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
