ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்...

X
Rasipuram King 24x7 |16 Nov 2025 8:28 PM ISTராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து ராசிபுரம் ரோட்டரி ஹாலில் இலவச கண் பரிசோதனை முகாமினை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முன்னதாக தொடக்க விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகாமில் கண் புரை நீக்குதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல் போன்றவை குறித்து மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 173 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 25 பயனாளிகள் கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில் ரோட்டரி மருத்துவத் திட்ட சேர்மேன் பி.கண்ணன், ரோட்டரி சங்கச் செயலர் மஸ்தான், ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கள் ஆர்.எஸ்.ரங்கசாமி, சி.கே.சீனிவாசன், நிர்வாகிகள் நடராஜன், வெங்கடாஜலம், இளங்கோ, மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story
