நாமக்கல் கடை வீதிகளில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்-துளசி மணி மாலைகள் வாங்க தீவிரம்

X
Namakkal King 24x7 |16 Nov 2025 9:50 PM ISTஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்கு தேவையான பொருட்களை வாங்க துவங்கி உள்ளனர். இதனால் நாமக்கல் கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திங்கட்கிழமை (நவம்பர் -17) முதல் ஐயப்ப சீசன் துவங்குவதையொட்டி, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் துளசி, சந்தன மாலை உள்ளிட்ட பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர்.கார்த்திகை மாதம் முதல் நாளான திங்கட்கிழமை (நவம்பர் 17) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை துவங்குவர். அதையொட்டி, நாமக்கல் கடைவீதியில் செயல்படும் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் துளசி, சந்தன, ஸ்படிகம், ருத்ராட்சை, கருங்காலி உள்ளிட்ட பல்வேறு வகையான மணிகள் அடங்கிய மாலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஐயப்பன், சிவன், முருகன், விநாயகர், பெருமாள், அம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமி உருவம் பொறிக்கப்பட்ட டாலர்களும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், காவி, கருப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ள வேட்டி, துண்டுகள், இருமுடி பைகளும், ஐயப்பன் பஜனை பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்கு தேவையான பொருட்களை வாங்க துவங்கி உள்ளனர். இதனால் நாமக்கல் கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Next Story
