சபரி யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரி யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
X
குமாரபாளையத்தில் சபரி யாத்திரைக்கு மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து கடும் விரதம் இருப்பது வழக்கம். நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால் குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலருக்கு குருசாமி மாலை அணிவித்து ஐயப்ப யாத்திரை விரதம் துவக்கி வைத்தார். இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Next Story