நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரியல் எஸ்டேட் அதிபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சமூக ஆர்வலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் வட்டாட்சியர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தார் இதற்கு நல்லுசாமி பாலமுருகன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது ஆனால் மாவட்ட நிர்வாகமும் சரியான விசாரணை செய்யாத நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வந்த பாலமுருகன் தன்னை நல்லுசாமி லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் செய்து வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த நிலையில் கீழே விழுந்து புரண்டு மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அவரை பாதுகாப்புக்கு நின்னு இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி பின்னர் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


