பள்ளிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு,மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு.

கொல்லிமலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கொடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வயலூர் பட்டி நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 132 மாணவர்கள் பயின்று வருகின்றனர் ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் ஆனால் வகுப்பறைகள் ஐந்து மட்டுமே உள்ளது 6 7 8 வகுப்புகளுக்கு தனித்தனி பாட ஆசிரியர்கள் நடத்த வேண்டியுள்ளது சில நேரங்களில் இரண்டு வகுப்புகள் வெளியில் அமர வைத்தே பாடம் நடத்தப்படுகிறது மழை நேரங்களில் வகுப்புகள் நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது கடந்த 2019 2020 வரை புதிய கட்டிடம் வழங்கப்படவில்லை மாணவர்களின் கல்வி நலன் மேம்பட இரண்டு வகுப்பறை கட்டிடம் வழங்க வழங்க வேண்டும் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Next Story