திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில், திமுக அரசின் சார்பில், புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில், திமுக அரசின் சார்பில், புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
X
திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில், திமுக அரசின் சார்பில், புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகத்தில் திமுக அரசு, மக்களைப்பற்றி கவலைப்படாமல், அவர்கள் பாதிக்கின்ற திட்டங்களைத்தான் செயல்படுத்துகிறது என்றும், போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறையின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தாங்கள் திருட்டு ஓட்டு போட முடியாமல் போய்விடும் என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்கிறது என்றும், நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்சியின் அமைப்பு செயலாளர்/ முன்னாள் அமைச்சர்/ சட்டமன்ற உறுப்பினர் P. தங்கமணி பேச்சு*. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில், திமுக அரசின் சார்பில், புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதை கண்டித்தும், வேறு இடத்தில் டைடல் பூங்காவை அமைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் (17.11.2025) நடைபெற்றது. இதில், அதிமுக அமைப்பு செயலாளர்/ முன்னாள் அமைச்சர் /குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் P. தங்கமணி தலைமை வகித்தார், முன்னாள் அமைச்சர் அதிமுக மகளிரணி மாநில இணை செயலாளர் டாக்டர் வெ. சரோஜா முன்னிலை வகித்தார். அப்போது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசினர் கலைக் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் டைடல் பூங்கா அமைக்க முயற்சி செய்து வரும் திமுக அரசை கண்டித்தும், அந்தப் பூங்காவை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாணவ மாணவிகளுக்காண விளையாட்டு மைதானம் உள்ள இடத்தில், அதனை ஆக்கிரமித்து, டைடல் பூங்கா அமைக்க கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் வேறு இடத்தில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அரசு கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் டைடல் பூங்கா அமைத்தால் தேவையில்லாத பல்வேறு பிரச்னைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் அதனை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை உரையாற்றி பேசிய அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா பேசும்போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குகூட பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு செய்து வரும் மாபெரும் துரோகம் இழைத்து வருகிறது. கடந்த 54 மாத காலமாக வெற்று வீண் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வரும் திமுக ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு சட்டக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மாபெரும் குடிநீர் திட்டங்கள், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக,நாமக்கல் மாவட்டம் இ lராசிபுரம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம், போதமலைக்கு சாலை வசதி போன்ற முக்கிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு, திட்டங்கள் முழுமை பெறுகின்ற நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் மக்கள் எவ்வித பயனையும் பெறவில்லை. ஆண்டகளூர்கேட் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரசினர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், திமுக அரசு டைடல் பார்க் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், அந்த கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்க இருக்கும் திமுக அரசை கண்டிக்கின்றோம். இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசினார். தொடர்ந்து தலைமை உரையாற்றி பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி, பேசும் போது திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மைதானத்தில் டைடல் பார்க் அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் வேண்டுமென்று அதே இடத்தில் திமுக அரசு அடிக்கல் நாட்டி உள்ளார்கள். அந்தக் கல்லூரி மாணவ மாணவிகளே அங்கு டைடல் பார்க் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் நடந்தது. கோவையில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுபோன்ற சம்பவங்கள் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இந்த திட்டத்தை கல்லூரி வளாகத்தில் செயல்படுத்துவதை எதிர்க்கின்றோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அந்த கல்லூரிக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் மற்றும் பிற பணிகளுக்காக நடைபெற்றது. மேலும் அந்தக் கல்லூரியில் எதிர்காலத்தில் அதிக மாணவ மாணவிகள் சேரும்போது தேவையான வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும். ஆனால் அங்கு டைடல் பார்க்க அமைத்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும். மேலும் பாதுகாப்பு இருக்காது. தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பை மீறி இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். திமுக கூட்டணி கட்சியினரே இந்த திட்டத்தை எதிர்க்கின்றார்கள். அதைப் பற்றி திமுக கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதியில் டைடல் பூங்கா அமைந்தால், பெண்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது. இந்த ஆட்சியாளர்கள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினாலும் அதைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் எதுவும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில், இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதனை திமுக அரசு இன்று முழுமையாக முடிக்கவில்லை. தேர்தல் வரவுள்ளதால் இராசிபுரம் நகரத்திற்கு மட்டும் ஓரிரு நாள்களில் நீர் வழங்கப்படுகிறது. திமுக அரசு எப்பொழுது முடிவுக்கு வரும், அதிமுக அரசு எப்போது ஆட்சிக்கு வரும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இராசிபுரத்தில் மட்டுமல்ல, திமுக ஆட்சியில் கடந்த5 ஆண்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு விட்டார்கள். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மொத்தம் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் தற்போது மது கடைகளை குறைக்காமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய கடைகளை தொடங்கி வருகின்றனர். பள்ளிபாளையத்தில் இதுபோன்ற மதுபான கடையை நடத்தக் கூடாது என சில தினங்களுக்கு முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் மீண்டும், திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடையை அறிவித்துள்ளார்கள். இதற்குப் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் திமுக அரசு, புதிய கடைகளை அறிவித்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் பாதிக்கின்ற திட்டங்களைத்தான் திமுக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை கஞ்சா போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக போதை பொருள் நடமாட்டம் உள்ளது. திமுகவை சேர்ந்த தொண்டர்கள் பலரும், அவர்களின் ஆட்சியை விரும்பவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் எடப்பாடி யார் பழனிசாமி வரவேண்டும். இந்திய தேர்தல் ஆணையம், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. ஆனால் திமுக அதனை எதிர்க்கிறது. இறந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரிக்கை விடுத்தது. இறந்த வாக்காளர் பெயரும் இரட்டை பதிவும் இருந்தால், அந்த வாக்குகளுக்கான பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டு, திருட்டு ஓட்டு போடுவதற்காகததான் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்கின்றது. பீகார் மாநிலத்தில் SIR முடிந்த பிறகு, யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் உச்சநீதிமன்றத்திற்கு வாருங்கள் என நீதிமன்றம் கூறியிருந்தபோதும் யாரும் பாதிக்கப்படாததால், யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. காரணம் யாருடைய வாக்குகளும் விடுபடவில்லை. முன்னதாக பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களின் பெயர்கள்கூட பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்தது. அவற்றையெல்லாம் தீவிர திருத்தம் செய்து நீக்கினார்கள். அதேபோலத்தான் தமிழகத்திலும் இறந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியவற்றை சீரமைத்து, வாக்காளர் பட்டியலை கொண்டு வர வேண்டும். கால அவகாசம் போதாது என்று திமுக கூறுவது வெற்று நாடகம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, தொகுதிகள்தோறும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் இரட்டை பதிவுகள் நீக்கப்படும். திமுக திருத்தப் பணிகளை எதிர்ப்பதற்கு காரணமே அவர்கள் திருட்டு ஓட்டு போட வேண்டும் என்பதற்காகத்தான். எனவே அதிமுகவினர் விழிப்போடு இருந்து தீவிர திருத்த பணிகளை கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில், திமுக அரசு ஏதாவது ஒரு காரணத்தை கூறி மத்திய அரசை எதிர்த்துக்கொண்டு, அதிமுகவையும் குறைகூறி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து அரசு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்ததால்தான் மீண்டும் அங்கு ஆட்சி தக்கவைக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசை குறை கூறுவதை விடுத்து தமிழகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மதவாத கட்சி கூட்டணி என்று குறை கூறுவதை விடுத்து மக்கள் நலனில் திமுக அக்கறை செலுத்த வேண்டும். அக்கட்சி மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி செய்துள்ளதால் மக்கள் எதிர்ப்புதான் வலுத்து உள்ளது. ஆனால் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில், வாடகை, மின் கட்டணம், போன்றவை கடுமையாக உயர்ந்து விட்டது. ஐந்தாயிரம் கோடி கடன் வாங்கி தான் ஆட்சி நடத்துகிறார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் தோல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கக் கூடாது. வளையபட்டி பகுதியில்சிப்காட் அமைக்க கூடாது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்களை முடிவுக்கு கொண்டு வர, வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை அனைவரும் ஒட்டுமொத்த குரலில் ஆதரிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தவுடன், மக்களை பாதித்துள்ள மதுபான கடைகள், திட்டங்கள் ஆகியவை, முதல் கையெழுத்தாக போடப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படும். சட்டத்தின் ஆட்சி நடத்தப்படும். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி நடத்தப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் P. தங்கமணி கேட்டுக்கொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராசிபுரம் நகர கழக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேம்பு சேகரன், தாமோதரன், கே.பி.எஸ். சரவணன், ராஜா, ஜி.பி.ரமேஷ், பரமத்தி-வேலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சேகர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதி, கலாவதி, வழக்கறிஞர்கள் தனசேகரன், சுரேஷ், தங்கதுரை, பூபதி, ராதா, மாவட்ட அவைத் தலைவர் கந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இ.ஆர்.சந்திரன், மாநில வர்த்தக அணி ஸ்ரீதேவி மோகன், மற்றும் ராகா தமிழ்மணி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வைரம் தமிழரசி, மற்றும் லதா,தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி, மற்றும் ராசிபுரம் நிர்வாகிகள் வி.டி. தமிழ்ச்செல்வன், கோபால், ஐ டி.விங். சர்தார், விஷ்வா, பேரூர் செயலாளர்கள் கே. பாலசுப்ரமணியம், என் கே பி செல்வம், மணிக்கண்ணன், செந்தில்குமார், திருச்செங்கோடு அங்கமுத்து, நாடாளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ..
Next Story