நவோதயா பள்ளிமாணவர் மாரத்தான் போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.

X
NAMAKKAL KING 24X7 B |17 Nov 2025 7:59 PM ISTநாமக்கல் பரமத்திவேலூர் ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாரத்தான் போட்டியை நடத்தி உடல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மாரத்தான் போட்டியை கடந்த வாரம் நடத்தியது. அதில் நமது நவோதயா பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வன் விகாஸ் கலந்துகொண்டு நாற்பதாவது இடத்தைப்பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மாரத்தான் போட்டியை ஒருங்கிணைந்து நடத்திய பரமத்திவேலூர் ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பாக ரூபாய் 1000 (ஆயிரம்) ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் இன்று சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கிய பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி மாணவரை வெகுவாக பாராட்டினார். மாணவரின் வெற்றிக்கு துணையாக இருந்த மாணவரின் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சகமாணவ, மாணிவயர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
Next Story
