கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தரகம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்,தரகம்பட்டி ஊராட்சி சங்கிபூசாரியூரில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து உணவு பொருட்களை வழங்கினார்,பாலராஜபுரம் ஊராட்சி காமராஜ் பண்ணையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் துரைராஜ், கடவூர் மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் பிரபாகரன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கட்டளை ரவிராஜா,ஒன்றிய அவைத்தலைவர் நல்லுசாமி,மாவட்ட பிரதிநிதி சிவகுமார்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சாக்ரடீஸ்,கோழி செந்தில்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேதவல்லி, வழக்கறிஞர் ராஜகோபால், கஸ்தூரி தங்கராஜ்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி அபுதாகீர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story