திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் எஸ் ஐ ஆர் பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை  அலுவலர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு.

எஸ் ஐ ஆர் பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை  அலுவலர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு. சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மனுக்கள் பெரும் பணி நடைபெற்று வருகிறது தாலுகா அலுவலகத்தில் மனுக்களை பதிவு செய்ய வருவாய்த்துறை அலுவலர் அல்லாத பணியாட்கள் பணிக்கு வந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகள் நடந்து வரும் நிலையில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாககூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட போவதில்லை என அறிவித்திருந்தனர் அதன்படி இன்றுதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்தஅலுவலர்கள் பணியாளர்கள் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை.ஆனாலும் சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்  ஜாக்டோ ஜியோ மற்றும் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தாலுகா அலுவலகத்திலும், திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்திலும் மற்றுமுள்ள இடங்களிலும்  மற்றுமுள்ள இடங்களிலும் படிவங்கள்டாட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மூலம் பதிவு செய்யும் பணி சீராக நடைபெற்று வருகிறது.உரிய அலுவலர்கள் இல்லாததால் பணியில் சற்று தொய்வு இருப்பதும் தெரிய வருகிறது.
Next Story