ஒன்றிய அரசை கண்டித்து சி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து சி.பி.ஐ.  கண்டன ஆர்ப்பாட்டம்
X
குமாரபாளையத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சி.பி.ஐ.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சி.பி.ஐ.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, ஒன்றிய பா,ஜ.க. அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்தது. நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர துணை செயலர்கள் அசோகன், விஜய் ஆனந்த், முன்னாள் மாவட்ட நிர்வாக குழு நிர்வாகி கார்த்திகேயன், நகர குழுவினர்கள் கேசவன், பாலசுப்ரணி,சேகர், மணி, அம்சவேணி, கணேசன், ரவி, மணிவேலன், செல்வராஜ், பூபதி, ராஜசேகர், மாதேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story