துளசிமணி மாலை, இருமுடி பைகள் விற்பனை ஜோர்

துளசிமணி மாலை, இருமுடி பைகள் விற்பனை ஜோர்
X
குமாரபாளையத்தில் துளசிமணி மாலை, இருமுடி பைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையத்தில் துளசிமணி மாலை, இருமுடி பைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து கடும் விரதம் இருப்பது வழக்கம்.. பெரும்பாலோர் 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரைக்கு தேவையான துளசிமணி மாலைகள் , இருமுடிப்பைகள், தேங்காய்கள், நெய், விபூதி, சந்தனம், குங்குமம், கருப்பு, நீலம் வண்ண ஆடைகள்,, பெட்ஷீட், தீபங்கள், எண்ணை வகைகள், கற்பூரங்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, அன்னதானத்திற்கு தேவையான பாக்கு மட்டை தட்டுகள், பூக்கள், ஐயப்பன் போட்டோக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை குமாரபாளையத்தில் ஜோராக நடந்து வருகிறது. . இதனால் பூஜை பொருட்கள் விற்கும் வியாபாரிகள் மகிழ்ச்சியடடைந்துள்ளனர். பல கோவில்களில் ஐயப்ப பக்தர்களின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
Next Story