எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் பணியில் ம.நீ.ம

X
Komarapalayam King 24x7 |19 Nov 2025 8:58 PM ISTகுமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தனவா? என்பதை கேட்டு, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்றும், முடியாதவர்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்தும் உதவுமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். சேலம் மண்டல செயலாளர் காமராஜ் தலைமையில் குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு பாகம் எண் 20,22 ஆகிய பாகம் எண்களில் ஜே கே கே சாலையில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, பூத் முகவர் கண்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வழங்கப்பட்டது.
Next Story
