தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு (UATT) 2.0 திட்டத்தை இரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கங்களின் நாமக்கல் மாவட்டத் தலைவர் பொ. திவ்யா தலைமை வகிக்க, மாவட்ட துணைச் செயலாளர் பெ. சுகன்யா முன்னிலை வகித்தார்.இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வட்டாரங்களில் இருந்தும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற இந்த கவன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கலில்லில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT = Uzhavar Aluvalar Thodarpu Thittam) என்ற அரசு ஆணையை விவசாயிகளின் நலன் கருதி இரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.இந்தப் புதிய அரசாணையில் தோட்டக்கலை தொழில்நுட்பம் மட்டும் பயின்று பணியாற்றி வரும், உதவி தோட்டக்கலை அலுவலர்களால் வேளாண் பயிர்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை பற்றி படித்திராத காரணத்தினால் விவசாயிகளுக்கு வேளாண் பயிர் உற்பத்தி மற்றும் பூச்சி நோய் பற்றிய தொழில்நுட்பங்களை வழங்க முடியாது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இந்த அரசாணை இரத்து செய்ய வேண்டும் என்றும்,கடந்த 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் தனித்துறையாக தோட்டக்கலைப் பயிர்கள் துறையை உருவாக்கியதின் மூலம் இத்துறையால், இன்று வரை சாகுபடி பரப்பு 21 இலட்சம் ஹெக்டராக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு அந்நிய செலாவணி 35 சதவீதம் இத்துறை மூலம் கிடைக்கின்றது.எனவே, இத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பிற துறையுடன் இணைக்கும்போது, நாட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற களப்பணியாளர்களை இணைக்கும் அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story