ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து....

X
Rasipuram King 24x7 |20 Nov 2025 7:32 PM ISTராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து....
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 30 டன் யூரியா உரங்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் முகமது உசேன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மசகாளிப்பட்டி அருகே சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் முகமது உசேன் லாரியை ஓட்டிச் சென்ற நிலையில் அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி பின்புற டயர்கள் மற்றும் டீசல் டேங்க் அனைத்துமே சுக்கு நூறாக உறங்கியது லாரியானது ஒருபுறம் அந்தரத்தில் தொங்கி நின்றது. விபத்தில் ஓட்டுநர் முகமது உசேன் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பின்னர் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தண்ணீரை பீச்சு அடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த லாரி விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Next Story
