காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.
X
ஆரணி ஆசிரியர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆரணி ஆசிரியர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.பிரசாத் தலைமை தாங்கினார். ஆரணி தொகுதி பொறுப்பாளர் யு.அருணகிரி, மாநிலபொதுக்குழுஉறுப்பினர் ராமலிங்கம், வட்டார தலைவர்கள் மருசூர் இளங்கோவன், பந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகர மன்ற உறுப்பினர் ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தேர்தல் கமிட்டி பொறுப்பாளர்கள் கிருஷ்ணதாஸ், இளையராஜா ஆகியோர் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், இறந்த வாக்காளர்களை நீக்குவது குறித்தும், இரண்டு இடங்களில் வாக்குகள் இருந்தால் அதனை நீக்குவது குறித்து பேசினார். இக்கூட்டத்தில் போளூர தொகுதி பொறுப்பாளர்கள் சேத்துப்பட்டு சத்யன், ராமச்சந்திரன், சுரேஷ், பழனி, மணவாளன், செய்யார் தொகுதி பொறுப்பாளர்கள் எம்.கலையரசன், ராஜவேல், முத்து, வெங்கடேசன், வந்தவாசி பொறுப்பாளர்கள் யூனிஸ்கான், விநாயகமூர்த்தி, யோகானந்தம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story