அதிமுக தெற்கு ஒன்றிய சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் பேசினார் தெற்குஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.
ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆரணி ஒன்றியபொருளாளர் பையூர் சரவணன், இலக்கியஅணி மாவட்டசெயலாளர் சித்தேரி ஜெகன், இளைஞரணி நிர்வாகி கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தெற்குஒன்றிய துணை செயலாளர் இரும்பேடு வேலு அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் தெற்குஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், இறந்த வாக்காளர்களை நீக்குவது குறித்தும், இரண்டு இடங்களில் வாக்குகள் இருந்தால் அதனை நீக்குவது குறித்தும் பேசினார். மேலும் இக்கூட்டத்தில் கிளை செயலாளர்கள் சித்தேரி ராஜா, கண்ணன், பழனி, விளைபாஸ்கர், நெசல் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story