தேசிய மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகளில் அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!

தேசிய மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகளில் அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!
X
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
2025 மற்றும் 26 ஆம் கல்வி ஆண்டில் வட்டளவில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல வெற்றிகளை பெற்று அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநில அளவிலான பேஸ்பால் தேர்வு போட்டி திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியல் கல்லூரியில் நடைபெற்றது,இதில் 14 வயது மற்றும் 19 வயது பிரிவில் அணியாபுரம் பள்ளி மாணவிகள் திவிஜா, கன்சிகா ஆகியோர் தேர்வு பெற்று ஜனவரி மாதம் டெல்லியில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளனர், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான (14, 17, 19 வயது பிரிவில் ) வாள்சண்டை போட்டியில் அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகள் ரூபாஸ்ரீ முதலிடம், லிசாஸ்ரீ இரண்டாம் இடமும்,முத்துமதி ,அனிதா,மணிமாலா, அக்ஷயா,தேஜாஸ்வினி, அகல்யா, ரேணுகா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர், அதே போல் மாணவர்கள் பிரிவில் 14 வயது பிரிவில் பூபேஷ் விக்னேஷ்,கிஷோர் ஆகியோர் முன்றாம் இடமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.மேலும் வட்ட அளவிலான எறிபந்து போட்டியில் 14 17 19 வயது பிரிவில் மாணவர்கள் முதலிடம்,14 மற்றும் 17 வயது மாணவர்கள் பூப்பந்து போட்டியில் முதலிடம் மற்றும் ஒரு இரண்டாம் இடம் பெற்றனர்.17 வயது பிரிவில் மாணவர்கள் கபடியில் முதலிடம் ,14 வயது பிரிவில் பூப்பந்து முதல் இடம் 17 வயது பிரிவில் இரண்டாம் இடம் 14 வயது பிரிவில் மாணவிகள் கபடியில் முதல் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் ஆகியோரையும் தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Next Story