நாமக்கல்லில் இலவச அக்குபிரஷர் மருத்துவ முகாம்!

X
Namakkal King 24x7 |21 Nov 2025 8:48 PM ISTமருந்தில்லா மருத்துவத்தை ஊக்குவிக்க இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இலவச முகாமில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளார் சங்கம், கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம் ஆர்.கே.எம் அக்குபிரஷர் கிளினிக், பயிற்சி மையம், இணைந்து நடத்திய இலவச அக்குபிரஷர் சிறப்பு மருத்துவ முகாம் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்முகாமிற்கு கொங்கு நாட்டு வேளாளர் சங்கத் தலைவர் பி.கே.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.இந்த முகாமில் சீன அக்குபங்சர், அக்குபிரஷர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆர்கேஎம் அக்கு பிரஷர் கிளினிக் மருத்துவர் ஆர்.குமாரசாமி தலைமையில் இருதயம், நுரையீரல், முதுகு வலி, கழுத்து வலி,மூட்டு வலி,சிறுநீரக கோளாறுகள்,பித்தப்பை கற்கள், சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறுகள், தூக்கம் இன்மை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மாணவர்களின் ஞாபகத்திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மருந்தில்லா மருத்துவத்தை ஊக்குவிக்க இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் பல்வேறு நோய்களுக்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கொங்கு நாட்டு வேளாளர் நிர்வாகிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Next Story
