கோவில் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி. நேரில் ஆய்வு

X
Komarapalayam King 24x7 |22 Nov 2025 9:02 PM ISTகுமாரபாளையம் கோவில் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில் கும்பபோஷேக விழா டிச. 1ல் நடக்கவுள்ளது. இதில் அர்த்கியா அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி. கிருஷ்ணன், நேரில் வந்து ஆய்வு செய்தார். கோவில் வளாகம், யாக சாலை, அன்னதானம் வழங்கும் இடம், பக்தர்கள் கூடும் இடங்கள், உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த அறிவுறுத்தினார். கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் வர வாய்ப்பு உள்ளதால், அதனை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளார்.
Next Story
