ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம்.
Arani King 24x7 |23 Nov 2025 4:26 PM ISTஆரணி அடுத்த இரும்பேடுஸ ஹரிஹரன் நகரில் ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆரணி அடுத்த இரும்பேடுஸ ஹரிஹரன் நகரில் ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணி அடுத்த இரும்பேடு, ஹரிஹரன் நகரில் 16 அடிக்கு மேலான உயரத்தில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் சுவாமியும் மற்றும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட உயர்ந்த கர்ப்ப கிரகமும், அரத்த மண்டபமும் அமைக்கப்பெற்று திருப்பணி நிறைவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புண்யாவாசனம், கும்ப ஆராதனை, அக்னி ஆராதனை, ததுக்க ஹோமம், மஹாசாந்தி ை ஜப்பியம், யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு புறப்பட்டு ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகஷளை ஆரணி விஸ்வரூப ஆஞ்சநேயர் அறக்கட்டளை மற்றும் இரும்பேடு ஹரிஹரன் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story


