ஒன்றிய பகுதிகளில் எஸ் ஐ ஆர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன

ஒன்றிய பகுதிகளில் எஸ் ஐ ஆர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன
X
ஒன்றிய பகுதிகளில் திமுகவினர். எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு பூர்த்தி செய்ய உதவினர்.
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சிறப்பு முகாமை பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் BLO (பூத் நிலை அலுவலர்) அவர்களிடம் இதுவரை பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ள SIR படிவங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட SIR படிவங்களைப் பற்றி தகவல்களை கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் திரு.A.ஜான்பீட்டர் அவர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மேட்டுக்கடை S.கார்த்திக் அவர்கள் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி.அழகுமணி அவர்கள் மற்றும் கழக BLA-2 நிர்வாகிகள் சண்முகம், முருகன், முருகேசன், வசந்த், வெங்கடேஷ், ஜேசுதாஸ், அழகேசன், அந்தோணிதோமினி , முருகன், ராஜவேல், கனகராஜ், மாதேஸ்வரன், அன்பழகன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
Next Story