மழைக்காலங்களில் மின் வாரியத்தில். ஏற்படும் இடர்பாடுகளை களைந்திட அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!-மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் தகவல்

மழைக்காலங்களில் மின் வாரியத்தில். ஏற்படும் இடர்பாடுகளை களைந்திட அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார்!-மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் தகவல்
X
நாமக்கல்லில் 20 இடங்களில் இ.வி., சார்ஜிங் பாயிண்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மின் வாரிய மேலாண் இயக்குனரும், தலைவருமான டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், நாமக்கல் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்களில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது..மழைக்காலங்களில் மின் வாரியத்தில். ஏற்படும் இடர்பாடுகளை களைந்திட அனைத்து முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும்,நடப்பாண்டு கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளித்தது போல் வரும் ஆண்டிலும் கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்,மேலும்
வரும் கோடை காலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்.. நாமக்கல்லை பொறுத்தவரை, அதிகளவில் எலக்ட்ரானிக் வாகனங்கள் வரப்போகிறது. வருங்கால தேவையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் பங்க்குகள், போக்குவரத்து கழக பணிமனைகள், தனியார் இடங்களில், இ.வி., சார்ஜிங் பாயிண்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பா, 850 கே.வி., டிரான்ஸ்பார்மர் தேவை என்று தெரிவித்துள்ளனர் பொதுவாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இ.வி., ஸ்டேஷனை பொறுத்தவரை, தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில், 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பேட்டியின் போது மேற்பார்வை பொறியாளர் (நாமக்கல் மின்பகிர்மான வட்டம்) சபாநாயகம்,செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், இணை இயக்குநர் ஆனந்த் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story