திருச்செங்கோடு ரத வீதிகளில் புதைவட மின் பாதை இரண்டாம் கட்டமாக அமைக்கும்பணி பூமி பூஜை செய்து துவக்கம் எம்எல்ஏ ஈஸ்வரன் சேர்மன் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்

X
Tiruchengode King 24x7 |24 Nov 2025 5:33 PM ISTதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் போது நான்கு ரத வீதிகளில் மின் தடை இன்றி தேர்வலம் வர வசதியாக புதைவட மின்பாதை ரூ95 லட்சம்மதிப்பீட்டில் அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் பூமி பூஜை செய்து துவக்கம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பணிகளை துவக்கி வைத்தார்
திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் போது அர்த்த நாரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி நான்குரத வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அவ்வாறுதிருவீதி உலா நடைபெறும் போது சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பிகளை அகற்றி மீண்டும் இணைப்பதால்ஏற்படும் மின்தடையால் வியாபாரிகள் பாதிக்கப் படுகிறார்கள். என்பதால் புதைவட மின்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் கடந்த 01 .8.2024 இல் ஒரு கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் முதல் கட்டமாக புதைவட மின்பாதை அமைக்கப்பட்டு 14/11/2024 இல் பணிகள் முடிவடைந்து அதன் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக தெற்கு மற்றும் மேற்கு வீதிகளில் புதைவட மின்பாதைமற்றும் தாழ்வழுத்த மின் பாதையில் உள்ள சுமார் 24 கம்பங்களில் உள்ள மின்கம்பிகளை அகற்றி புதியதாக புதைவட கேபிள் அமைக்கும் பணி ரூ 95 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. பூக்கடை சந்திப்பு பகுதியில் நடந்த பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கரூர் மண்டல மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,வடக்கு நகர செயலாளர்நகர் மன்ற உறுப்பினர் அசோக் குமார் தெற்கு நகர செயலாளர் சேன்யோகுமார்,அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார்,விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வெற்றி செந்தில், இந்து சமயஅறநிலையத்துறை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன்,சின்ன மாரியம்மன் கோவில் நிர்வாகி ராஜா, நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், மைதிலி, அண்ணாமலை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம், திருச்செங்கோடு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், திருச்செங்கோடு வடக்கு உதவி செயற்பொறியாளர்சீனிவாசன், தெற்கு உதவி செயற்பொறியாளர் யோகநாதன், எலச்சிபாளையம் உதவி செயற் பொறியாளர் சண்முகசுந்தரம், மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு உதவி பொறியாளர்கள் மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
