வாக்காளர் பட்டிலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டையை திருப்பி வழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூரை சேர்ந்தவர் கமலசேகரன் ( வயது 50). டூரிஸ்ட் டிரைவராக உள்ளார்.
அவரது மனைவி மீனா. மகள் இளவரசி. கமலசேகரன் நேற்று நடைபெற்ற எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் இளவரசிக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள நிலையில், கமலசேகரன் அவரது மனைவி மீனாவிற்கு பெயர் இல்லை என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் தங்களது வாக்காளர் அட்டையை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அப்போது கடந்த 32 வருடங்களாக வாக்களித்து வந்த தனக்கு ஓட்டு இல்லை என்பதை அதிர்ச்சியாக உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Next Story


