தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் ஆர் ஜி ஆர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பட்டயத் தேர்வு..

X
Rasipuram King 24x7 |24 Nov 2025 9:25 PM ISTதமிழ்நாடு சோட்டா கான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் ஆர் ஜி ஆர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பட்டயத் தேர்வு..
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஆர்.ஜி. ஆர்.இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பட்டயத் தேர்வு நடைபெற்றது. இதில் ஆர் ஜி ஆர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆர்ஜிஆர் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் என 50.க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கராத்தே தற்காப்பு கலை நுணுக்கங்கள், உடல் தாங்கும் திறன், கட்டா, குமிட்டி போன்ற பயிற்சி தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி தலைமை பயிற்சியாளர் வி. சரவணன், பயிற்சியாளர் கே. வெங்கடாசலம் ஆகியோர் தேர்வுகளை நடத்தி மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆர். ஜி.ஆர்.பள்ளியின் தாளாளர் திரு. ரித்திக் பிரவீன் மற்றும் முதல்வர் பொய்யாமொழி அவர்கள் தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை கூறி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்..
Next Story
